தமிழகத்தில் இன்றைய காலை 7 மணி முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , திரைப்பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திருவான்மியூர் ஓட்டுச்சாவடிக்கு மனைவி ஷாலினியுடன் ஓட்டளிக்க வந்த நடிகர் அஜித் அங்கு மாஸ்க் அணியாமல் செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை வெடுக்கென பிடிங்கி கொண்டார். பின்னர் அந்த செல்போனை தன் உதவியாளரிடம் கொடுத்து “எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அது பாதுகாப்பானது. நடிகராகவே இருந்தாலும் அருகே சென்று செல்பி எடுக்க வேண்டாம்” என்று அறிவுரை கூறியுள்ளார்.