நாடெங்கும் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழகத்திலும் கேரளாவிலும் டாஸ்மாக்குகளை உடைத்து உள்ளே நுழைந்து மதுபானங்களை திருடுதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.
அதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் மன உளைச்சலுக்கு ஆளான சிலரும் கேரளாவில் 7 பேரும் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள முதல்வர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துள்ளது. மேலும் கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் இதுபோல பரிந்துரை செய்யக் கூடாது என உத்தரவுப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த நாட்களை மதுப்பழக்கத்தை கைவிட பயன்படுத்திகொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வரின் இந்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ’குடி’மகன்கள் மேலும் அதிர்ச்சியால்கியுள்ளனர்.
Biggboss Tamil:…
Game Changer:…
OTT Tamil:…
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…