ரஜினியும் முருகதாஸும் எத்தனை நாள் ஜெயிலில் இருந்தார்கள்  ? – சீமான் ஆவேசம் !

Published on: January 13, 2020
---Advertisement---

b490f7184e1b9bec4a8fbe712d059397

தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும்படி வைக்கப்பட்டிருந்த வசனம் ஒன்றுக்கு சீமான் ரஜினி மற்றும் முருகதாஸுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்பார் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு வசனம் தமிழக அரசியலில் சர்ச்சைகளைக் கிளப்பியது. படத்தில் சிறையில் செல்போன் பயன்படுத்தப்படும் இடத்தில்  ’காசு, பணம் இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம்’ என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது.  இது கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்ததாக சொல்லப்பட்ட அமமுக தலைவர் சசிகலாவை தாக்கும் விதமாக அமைந்துள்ளது என அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அடுத்த நாளே அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பற்றி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘அந்த விமர்சனத்தை நான் ஏற்கவில்லை. தம்பி முருகதாஸ், ரஜினி எல்லாம் எவ்வளவு நாள்  சிறையில் இருந்தார்கள் என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவர்கள்(சசிகலா)  வெளியே வந்தார்கள் என்று நிரூபிக்கபட்டால் நீங்கள் பேசலாம். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி பேசுவதை ஏற்க முடியாது.’எனக் கூறியுள்ளார். சீமானின் இந்த திடீர் சசிகலா ஆதரவு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Leave a Comment