ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் முன்பு குடிகாரர்கள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பிதியால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் பரிதவிக்க ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒருநாள் மட்டுமே முடிந்த நிலையில் டாஸ்மாக் முன்னர் மக்கள் கூட்டமாகக் கூடியுள்ளனர். அங்கு வந்த போலிஸ்காரர் அவர்களை கலைந்து போக சொல்ல கலையாமல் அப்படியே நிற்கின்றனர். மேலும் அதில் உள்ள ஒரு இளைஞர் கல்லை எடுத்த டாஸ்மாக் ஷட்டரை அடித்து உடைக்க முயற்சிக்கிறார். அதைப் போலீஸ் வீடியோ எடுக்க ‘எடுத்துக்கொள் என்பது மாதிரி கேமராவுக்கு முன்னர் வந்து தன் முகத்தைக் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/prtheeban/videos/3031255996894742/
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…
சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம்…
சிவகார்த்திகேயன் சுதா…