தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை

Published on: June 23, 2021
---Advertisement---

c36afce510d4d4b499d0fa0fdaf0cb49

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதுது. ஆனாலும்,  வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment