விஜய் வீட்டிலும் புகுந்த ஐடி அதிகாரிகள்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வரும் நிலையில் சற்று முன் நெய்வேலி சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் சம்மன் அளித்து அவரிடமும் விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து வருவதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய்யின் சாலிகிராமம் மற்றும் நிலாங்கரை வீட்டிலும் ஐடி அதிகாரிகள் குழு ஒன்று திடீரென புகுந்து சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த தகவல்களால் திரையுலகையும் அதிர்ச்சியில் உள்ளது 

மேலும் தளபதி விஜய் வீட்டில் ரெய்டு நடப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த ரெய்டுக்கு பின் ‘பிகில்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு? விஜய்யின் சம்பளம் எவ்வளவு? படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு? என்ற தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இதுவரை ஆளாளுக்கு ஒரு தொகையை பிகில் வசூலாக வடை சுட்ட நிலையில் அந்த படத்தின் உண்மையான வசூல் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்

Published by
adminram