இதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று கூறிய ரஜினியை கிண்டல் செய்த நெட்டிசன்கள்

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ’தர்பார்’ படத்தின் புரமோஷன் விழாவில் 70 வயதிலும் எனர்ஜியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனையை ரஜினிகாந்த் கூறினார்

70 வயதிலும் அதற்கும் மேலும் எனர்ஜியாக இருக்க வேண்டும் என்றால், ‘ஆசையை குறைக்க வேண்டும் என்றும், கவலையைக் குறைக்க வேண்டும் என்றும், உணவைக் குறைக்க வேண்டும் என்றும், தூக்கத்தை குறைக்க வேண்டும் என்றும், பேசுவதை குறைக்க வேண்டும் என்றும், இதனை எல்லாம் கடைபிடித்தால் 70 வயதிலும் எனர்ஜி கிடைக்கும் என்று கூறினார்

இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் இத்தனையையும் குறைக்கும் ரஜினிகாந்த்  சம்பளத்தை மட்டும் ஏன் குறைக்க மாட்டேன் என்கிறார்? ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் 

இருப்பினும் ரஜினியின் இந்த அறிவுரையை பெருவாரியான ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு இனிமேல் இதன்படி வழி நடக்க இருப்பதாக கமெண்ட் பகுதிகள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram