">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லாக்டவுனில் நடிகை ராஷ்மிகா மந்தனா செய்த உருப்படியான காரியம்..!
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.
அந்தவகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கிரீன் இந்தியா சேலஞ்ச் ஏற்று மாமனார் நாகார்ஜூனா உடன் சேர்ந்து மரக்கன்று நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு தன்னை போலவே நீங்களும் மரக்கன்றுகள் நடுங்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துளளார்.
சமந்தாவின் இந்த வேண்டுகோளை ஏற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா தன் வீட்டு தோட்டத்தில் செடி நட்டுவைத்த வீடியோவை ட்ட்விட்டரில் வெளியிட்டு நடிகைகள் ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன் , ஆஷிகா ரங்கநாத் ஆகிய மூவரையும் நாமினேட் செய்துள்ளார். ஒரு சங்கிலி கோர்வையாக நடைபெற்று வரும் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சிற்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Everyone I know will do anything good for the environment sir.. this i am sure of. thankyou for supporting sir. We’ll make India a greener place to live! #GreenindiaChallenge #GIC https://t.co/tx3rrVMVIW
— Rashmika Mandanna (@iamRashmika) July 16, 2020
Everyone I know will do anything good for the environment sir.. this i am sure of. thankyou for supporting sir. We’ll make India a greener place to live! #GreenindiaChallenge #GIC https://t.co/tx3rrVMVIW
— Rashmika Mandanna (@iamRashmika) July 16, 2020