25 வருடம் ஆகிவிட்டது… இன்றுதான் காதலை சொன்னாய்… லவ்யூ டா… உருகும் குஷ்பு

Published on: February 23, 2020
---Advertisement---

5e0a40c438e07ceaa5880bd62eee5e2f

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர் சி. இயக்கத்தில் முறை மாப்பிள்ளை படத்தில் நடித்த போதுதான் சுந்தர்.சி அவரிடம் காதலை கூறி ஓகே செய்தார். அப்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு ‘ 25 வருடங்களுக்கு முன்பு என்னிடம் நீ காதலை கூறிய அந்த நாள் இன்று.. நம் குழந்தைகள் எப்படி இருக்கும் என பார்க்க ஆசையாக இருக்கிறது எனக்கேட்டாய்.. 

இப்போது 25 வருடங்களுக்கு பின்பும் எதுவும் மாறவில்லை. அப்போது போலவே இப்போதும் உன்னை நேசிக்கிறேன். இப்போதும் நீ என் கண்ணை பார்த்தால் நான் வெட்கப்படுகிறேன். என் வாழ்வில் நிகழ்ந்த சிறப்பான நிகழ்வு நீ. உன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை கேட்டதற்கு நன்றி.. லவ் யூ டா’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment