எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் தொடர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதே கதையை இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்கள் திரைப்படமாக இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வரும் நிலையில் எம்ஜிஆர் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்படி சற்றுமுன்னர் இரண்டு எம்ஜிஆர் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அரவிந்த்சாமியே கண்ணுக்கு தெரியவில்லை என்றும் அப்படியே எம்ஜிஆர் நம் கண்முன் நிற்கிறார் என்றும் எம்ஜிஆர் ரசிகர்களும் தொண்டர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram