இது புதுசா இருக்கே! இப்படியும் எடுக்க முடியுமா?.. ஆளே மாறிய நடிகைகள்

ஆனால், உண்மையில் அதுதான் நடந்துள்ளது. மிகச்சிறந்த ஓவியராக விளங்கி அற்புதமான படைப்புகளை கொடுத்தவர் ரவிவர்மா. இவரின் ஓவியத்தில் பெண்களை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார். தற்போது அவரின் ஓவியத்தில் இருக்கும் பெண்கள் போல் நடிகைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் இதை நடத்தினார்.

இதில், நடிகைகள் சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரவிவர்மா ஓவியம் போல் போஸ் கொடுத்தனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
adminram