இவ்ளோ எதிர்பார்த்தும் படம் ஓடாம...போச்சே...! |வட...போச்சே| என அலறும் நடிகர்கள்

by adminram |

428fedc3f6f02ccf4316259091bb68cd

இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் அல்லவா? அதுவும் வித்தியாசமான திரைக்கதை, நல்ல பாடல்கள் இருந்தும் ஏன் படம் சரியாக ஓடவில்லை என்று கேட்பதைப் பார்;த்திருப்போம்.

லேட் பிக் அப் படங்கள்

சில படங்கள் ரிலீஸாகும்போது அவ்வளவாக ஓடுவதில்லை. கூட்டமும் குறைவாகவே இருக்கும். கொஞ்ச நாள் கழித்து படம் பிக் அப் ஆக ஆரம்பித்து விடும். அதன்பிறகு அந்தப் படத்தின் மார்க்கெட் எகிற ஆரம்பித்து கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட படங்களும் தமிழ்சினிமாவில் வந்துள்ளன. இதையே லேட் பிக் அப் படங்கள் என்பர். உள்ளத்தை அள்ளித் தா, ஜெமினி, முனி போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

இன்னும் சில படங்கள் செகண்ட் ரிலீஸின்போது தான் நன்றாக ஓடும். அந்த வகையில் வந்தது தான் தனுஷின் புதுப்பேட்டை படம். முதலில் வசூல் ரீதியாக நன்றாக போகவில்லை என்றாலும் தற்போது வரை அந்தப் படம் தான் ரசிகர்களால் கேங்ஸ்டர் படம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தான் தனுஷ் நாயகன் என்ற அந்தஸ்துக்கே வந்தார் என்கிறார், படத்தின் இயக்குனரும், அவரது அண்ணனுமான செல்வராகவன்.

தற்போது பழைய தமிழ்சினிமாக்களை தூசு தட்டி டிஜிட்டலில் வெளியிடுகின்றனர். அப்படி வந்த படங்களில் கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், அன்பே வா, வசந்த மாளிகை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றே வருகின்றன. அப்போதைய ரசிகர்கள் எவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் படத்தின் ரிலீஸின்போது ஆரவாரம் செய்தார்களோ அதே அளவில் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை, பாடல்கள், விறுவிறுப்பு, நகைச்சுவை என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், நல்ல கதை இருந்தும் படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லையே...என்று சொல்லும் வகையில் உள்ள படங்களைக் கொங்சம் சாம்பிள் பார்க்கலாம்.

65def516496cd0618414d0cc17701a0a-1

சூர்யா நடித்த காப்பான் படம் ஓடவில்லை. காரணம் என்னவென்று ரசிகர்களிடம் கேட்டால் சிம்பிளாக இது அஞ்சான் 2 என்கிறார்கள். அதேபோல் மாஸ், சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே என தொடர் தோல்விகள். காரணம் என்னவென்றால், அது அவர்களுக்கே தெரியாது.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஒருமாதிரியாக மளமளவென வளர்ந்து வந்தார். 96 படத்துக்கு பிறகு வந்த படங்களான சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் என தொடர் தோல்விகள்.

7183f950542a237d7170cbbd1b85068e-1

தொடர்ந்து வந்த சங்கத்தமிழன் படமும் அவருக்கு ஏமாற்றத்தையே தந்தது. தற்போது மாஸ்டர் ஹிட் அடித்து விட்டது. ஆனால் அதற்கு முன்பே படம் கமிட் ஆகும் போது சம்பளத்தை 5 கோடியிலிருந்து 10 கோடியாக்கி தயாரிப்பாளர்களை மிரள வைத்தாராம் விஜய் சேதுபதி. ஆனால் தற்போது அவரது கால்ஷீட் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. வெப்சீரிஸ் ஒன்றை இந்தியில் நடிக்க இருக்கிறார். வருடம் முழுவதும் பிசியாகி விட்டார் விஜய்சேதுபதி.

Next Story