More

ரசிகர்களை ஏமாற்றிய ஜகமே தந்திரம்… இப்படி ஆகிப்போச்சே!….

கார்த்திக் சுப்பாராஜ் இயக்க நடிப்பு அசுரன் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் கடந்த வருடமே முடிந்தும் கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி தற்போது நெட்பிளிகிஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், டிரெய்லரில் இடம் பெற்ற காட்சிகள் இப்படம் ஒரு காமெடி ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்களை நினைக்க வைத்தது.

Advertising
Advertising

இந்நிலையில்தான் இப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் சிறப்பான, நேர்மறையான விமர்சனத்தையும், பாராட்டையும் பெறவில்லை. ஒரு சராசரி ஆவரேஜ் திரைப்படமாகத்தான் ஜகமே தந்திரம் வெளியாகியுள்ளது. 

மதுரையை சேர்ந்த சுருளி (தனுஷ்) ஒரு காரணத்தினால் லண்டன் செல்ல நேர்கிறது. அங்கு ஒரு கெட்ட டானிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒரு நல்ல டானை கொலை செய்கிறான். ஆனால், அதன்பின் அவன் உண்மையை புரிந்து கொண்டு கெட்ட டானை பழிவாங்குகிறான் என்பதுதான் ஜகமே தந்திரம் படத்தின் ஒருவரிக்கதை.  தனுஷின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணின் பாடல் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு திரைப்படம் இல்லை என்பதே ஜகமே தந்திரம் படத்தின் பலவீனமாகி விட்டது. 

பல காட்சிகளில் தனுஷ் ரஜினியை நியாபகப்படுத்துகிறார். ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்துள்ளார். அதை தெரிந்தேதான் செய்ததாக அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். சில காட்சிகளை கார்த்திக் சுப்பாராஜ் ரசிக்கும் படி அமைந்திருந்தாலும் சாதாரன கதை மற்றும் திரைக்கதை படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்துவிட்டது. 

எனவே, படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாகவும், 2ம் பாதி கொஞ்சம் ஓகே என்றுதான் பலரும் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இத்தனைக்கும் தனுஷ் ஏற்கனவே புதுபேட்டை மற்றும் வட சென்னை என 2 கேங்ஸ்டர் படங்களில் நடித்தவர். கார்த்திக் சுப்பாராஜும் தன்னால் முடிந்த வரை திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைக்க மெனக்கெட்டுள்ளர். ஆனால், ஒரு பலவீனமான டான் திரைப்படமாகவே ஜகமே தந்திரம் பார்வைக்கு தெரிகிறது. 

அதேநேரம், படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும், கார்த்திக் சுப்பாராஜ் மட்டும் திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இப்படம் மேலும் ரசிக்கும் படி வந்திருக்கும் என சினிமா விமர்சகர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மொத்தத்தில் நீங்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஜகமே தந்திரம் படத்தை பார்த்தால் உங்களுக்கு இப்படம் ஓகே ரகம். டிரெய்லரை எல்லாம் பார்த்துவிட்டு பெரிய எதிர்பார்ப்போடு பார்த்தால் இப்படம் உங்களுக்கு ஏமாற்றமாக அமையும்.. 

அதேநேரம் தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்…

Published by
adminram

Recent Posts