கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் போன வருடமே முடிவைடைந்து விட்ட நிலையில், இதுவரையில் ரிலீஸ் ஆகவில்லை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி, ரகிட ரகிட ரகிட, நேத்து உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நான்தான்டா மாஸ்’ பாடல் வரிகள் வீடியோவை நேற்று வெளியானது.
இந்நிலையில், இப்படம் வருகிற 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. அதோடு, ஓடிடியில் வெளியாகி 2 மாதம் கழித்து இந்த திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…