ஜகமே ரிலீஸ் தேதி அறிவிப்பு - ஆனாலும் சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்...

by adminram |

93b7a7705f683ce0730123532acc2d51

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் இடம் பெற்ற ரகிட ரகிட, என்னை மட்டும் லவ்வு பண்ணு புஜ்ஜி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது. ஆனால், திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பே இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்தார்.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜுன் மாதம் 18ம் தேதி ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷின் அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வசூலை குவித்த நிலையில், ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாவது அவரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story