அடுத்த கோலி கிடைச்சாச்சு – உலகக்கோப்பையில் கலக்கிய ஜெய்ஸ்வால் !

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை இழந்துள்ள வேளையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது வாங்கியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நேற்று வங்கதேசத்திடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் மூலம் முதல் முறையாக வங்கதேச அணி உலகக்கோப்பைத் தொடரை வென்றுள்ளது.

உலகக்கோப்பை தோல்வி ஒரு புறம் வருத்தத்தை அளித்தாலும் தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ள யாஷாவி ஜெய்ஸ்வாலால் ஆறுதல் அடைந்துள்ளனர் இந்திய ரசிகர்கள். இந்த தொடரில் ஜெய்ஸ்வால் 8 போட்டிகளில் 425 ரன்களை சேர்த்துள்ளார். நேற்றைய இறுதிப் போட்டியில் மற்ற அனைத்து வீரர்களும் சொதப்ப 88 ரன்களை சேர்த்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் விரைவில் இந்திய அணியில் விளையாடுவார் என்றும்  கோலியை போல மிகப்பெரிய வீரராக வருவார் எனவும் இப்போதே ஆருடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

Published by
adminram