தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்னும் அதிகளவு தற்காலிக மருத்துவ மனைகளை நிர்மாணிக்கவும் அரசு முயற்சி செய்து வருகின்றது.
இதையடுத்து தேவைப்பட்டால் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக உபயோகித்துக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஜக்கி வாசுதேவ். மேலும் தங்கள் ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இருவருக்காவது உணவளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வீட்டை கொரோனா மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…