
குறிப்பாக அலங்கநல்லூர்,அவனியாபுரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் விஷேசமானது.
இந்நிலையில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த காளை மாடு முன் ஒரு பெண், கைக்குழந்தை மற்றும் மகனுடன் சிக்கிக்கொண்டார். அவர்களை மாடு கொம்பால் குத்தி தூக்கி விடுமோ என சுற்றி இருந்தவர்களும், மாடு பிடி வீரர்களும் பயந்தபடி பார்த்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் மாட்டின் காலுக்கடியில் அமர்ந்து கொண்டனர். அவர்களை எதுவும் செய்யாத மாடு, அவர்களை தாண்டி தாவி குதித்து சென்றது. இந்த புகைப்படங்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து மாடுகள் இரக்கமுடியது.. அவற்றின் கண்களுக்கு பெண், குழந்தை யார் என தெரியும் என பதிவிட்டு வருகின்றனர்.

மனிதம்… pic.twitter.com/MEnjcRy81o
— Ramesh (@RHoneykumar) January 18, 2020