மீண்டும் பாமகவில் சலசலப்பு – தனியாகக் கட்சி ஆரம்பிக்கும் ஜெ குருவின் மகன் ?

Published on: January 10, 2020
---Advertisement---

259402c20c7d029e17f5f63d7cd33606-1

பாமகவில் தற்போது இருக்கும் ஜெ குருவின் மகன் கனலரசன் புதிதாக ஒரு கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாமகவின் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்தவர் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு. அவரின் இறப்புக்குப் பின்னர் பாமக தலைமைக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவானது. குருவின் மனைவி, சகோதரிகள் மற்றும் அவரது மகன் கனலரசன் ஆகியோர் பாமகவுக்கு எதிராக பேட்டியளித்தனர்.

அதன் பிறகு ஒருவழியாக கனலரசனை சமாதானப்படுத்தி குருவின் நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு வரவைத்தார் ராமதாஸ்.  ஆனாலும் இரு தரப்புக்கும் இடையிலான விரிசல் முழுவதுமாக சரியாகவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் கல்லூரிப் படிப்பை முடிக்க இருக்கும் கனலரசன், தனியாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பொறுப்புகளை அவரது மாமாவான வி ஜி கே மணி நிர்வகிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Comment