சீரியலில் களம் இறங்கிய நீச்சல் வீராங்கனை... ரசிகர்களுக்கு விருந்துதான்!....
நீச்சல் வீராங்கனையாக பல தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ஜனனி. நீச்சல் மட்டுமில்லமல் மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள ஜனனி தற்போது சீரியல் நடிகையாக மாறியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் அவர் நடிக்கவுள்ளார். இந்த சீரியல் வருகிற 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. ஜனனி பொறியியல் பட்டம் பெற்றவர். 2018ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். தேசிய அளவிலான பல நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.
சீரியலில் நடிக்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் இந்த சீரியலின் புரமோ வீடியோவை பகிர்ந்துள்ளார். அதோடு, நடிப்புத்துறையில் கால் பதிக்கும் தனக்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அவர் நளினி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் நடித்து புகழ் பெற்ற ஆனந்த செல்வன் லீட் ரோலில் நடிக்கவுள்ளார்.