வேற லெவல் போ!..பாவாடை தாவணியில் பளிச் அழகு!... லைக்ஸ் குவியும் ஜனனி புகைப்படம்..
தெகிடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஜனனி ஐயர். அதன்பின் அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரின் அழகான தோற்றம் மற்றும் க்யூட்டான முகபாவணைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சமீபத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயரை நீக்கிவிட்டு இனிமேல் நான் ஜனனி மட்டுமே என அறிவித்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
எப்படியாவது சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அழகழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், பாவாடை தாவணி அணிந்து அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளது.