ஸ்ரீ தேவி உயிரோடிருந்திருந்தால் செவிலில் அறைந்திருப்பார் - மோசமான கவர்ச்சியில் ஜான்வி கபூர்!
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீ தேவி. விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர் 1969ல் வெளியான துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.
அதன்பின் கதாநாயகியாக கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடித்து தமிழக ரசிகர்ளை கவர்ந்தார். ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.
பின்னர் 1996ல் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் மாராப்பு போடாமல் ஜாக்கெட்டோடு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து கதிகலங்க செய்துள்ளார்.
ஸ்ரீ தேவி எப்போதும் தன் மகள் ஜான்வியிடம் தாவணி பாவாடை கட்டிக்காட்ட சொல்லி ஆசையோடு கேட்பாராம். ஆனால், அப்போது அதை அலட்சியமாக நினைத்த ஜான்வி பின்னர் அம்மா இறந்த பிறகு அவர் கூறியதை போலவே தாவணி பாவாடை அணிந்தார். எனவே இப்போ மட்டும் ஸ்ரீதேவி ஜான்வியை இந்த கோலத்தில் பார்த்திருந்தால் பளார்னு அறைந்திருப்பார்.