அவர் படத்துல ஓரமா டேன்ஸ் ஆடுவேன்.. ஆனா இப்போ!.. ஷங்கர் படத்தின் டேன்ஸ் மாஸ்டர் நெகிழ்ச்சி….

Published on: July 18, 2021
---Advertisement---

9d478661ccdbf51178fb6fd5cf880378

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர்.இந்தியன் 2 திரைப்படம் தொடர்பான வழக்கில் ஷங்கருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இது அரசியல் பரபர ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் ராம்சரண் முதலமைச்சராக நடிக்கவுள்ளார். அதோடு, இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். 

ed99d73930def7177923145b72116368

இந்நிலையில், இப்படத்தில் நடன இயக்குனராக ஜானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து வருபவர். குறிப்பாக அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்திற்கும் இவர்தான் நடன அசைவுகளை அமைத்தார். இப்படத்தில் அவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, தெலுங்கு சினிமா நடிகர்களின் ஃபேவரைட் மாஸ்டர் ஆகிவிட்டார்.

8584175c48ed7e872bb4e35c29296a43

தற்போது ஷங்கரின் புதிய படத்திற்கு அவர் நடனம் அமைக்கவுள்ளார். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஜானி ‘ஒரு நிகழ்ச்சியில் ‘முக்காபுல்லா’ பாடலுக்கு ஆடியிருக்கிறேன். பாய்ஸ் படத்தில் 500 பேரில் ஒருவராக கும்பலில் ஆடினேன். அப்போதிலிருந்தே அவரை ஆச்சர்யமாக பார்க்கிறேன். தற்போது அவருடைய திரைப்படத்தில் பணிபுரிகிறேன். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராம்சரணுடன். இதை நம்பவே முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார்’ என உருகியுள்ளார்.

 

Leave a Comment