த்ரிஷா படத்தில் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட காட்சிகள்… சென்ஸார்ல எப்படி தப்பித்தது ?

Published on: February 24, 2020
---Advertisement---

ea9dc92e75e027a03b9f6b49785f8397-1-2

த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தினைப் பற்றி இயக்குனர் பாக்யராஜ் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் சிறு படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிப்பதில் எப்போதுமே ஆர்வம் காட்டுபவர். இந்நிலையில் த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘பரமபதம் விளையாட்டு' அருமையான தலைப்பு. இதை எப்படி இவ்வளவு நாள் யாரும் பயன்படுத்தாமல் இருந்தார்கள் எனத் தெரியவில்லை. படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது ஆர்வம் எழுகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை.’ என கலகலப்பாக பேசினார்.

பரமபதம் படத்தில் த்ரிஷா பெண் மருத்துவராக நடித்துள்ளார், அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அரசியல் வாதி ஒருவர் அனுமதிக்கப்படுவது போலவும் அதை ஒட்டி அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை நீக்க சொல்லி மிரட்டுவது போலவும் சில காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைதான் பாக்யராஜ் ஜெயலலிதாவின் அப்போல்லோ சிகிச்சையை குறிப்பிட்டு பேசினார்.

Leave a Comment