அடுத்தது அரசியல்தான்! பாஜகவில் இணையும் ஜீவஜோதி….

ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, அவரின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த வழக்கில் சரவணா ஹோட்டல் ராஜகோபால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமினில் வெளியே வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.

கடந்த சில வருடங்களாகவே தஞ்சாவுரில் வசித்து ஜீவஜோதி அங்கு மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தைக்கப்படும் ஆடைகளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் அட்டையை ஏற்கனவே பெற்றுவிட்ட ஜீவஜோதி முறைப்படி விரைவில் கட்சியில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram