
நடிகர் ஜீவா நடித்த ’கீ’ மற்றும் ’கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அவற்றில் முதலாவதாக ’சீறு’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ’சீறு’ படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஜீவா, ரியாசுமன், நவ்தீப், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’றெக்க’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவில் லாரன்ஸ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜீவாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
.@VelsFilmIntl ‘s Next, @JiivaOfficial’s Much Awaited flick #Seeru Is all set To Hit The Screens On Feb 7th ! #SEERUFromFeb7th @iamactorvarun @rathinasiva7 @immancomposer @prasannadop @Ashkum19 @editorkishore @SonyMusicSouth @DoneChannel1 pic.twitter.com/mlMW1jUmp9
— Vels Film International (@VelsFilmIntl) January 6, 2020