அண்ணன் மகள் கல்யாணத்தில் நகை திருட்டு…. நடிகர் சூரியை சுற்றி வளைத்த போலீசார்!

Published on: September 13, 2021
---Advertisement---

25df7dcf24027144c5c5ba13a0320292-1

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சூரி ஹீரோ ரேஞ்சுக்கு தனது உடல் , தோற்றம் ஸ்டைல் என கொஞ்சம் கொஞ்சமாக மாறி எல்லோரையும் ஆச்சர்யத்துக்குள்ளாகியுள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரைத்துறையில் காமெடியனாக அறிமுகமான இவர் இதுவரை சுமார் 100 படங்கள் நடித்திருப்பார். 

லாக்டவுன் சமயத்தில் நிறைய விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் நல உதவிகள் என மக்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் கடந்த 9-ம் தேதி  மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

488ec00d4ced282e9a764877c9e5f047-1

இந்த திருமணத்தில்10 சவரன் தங்க நகைகள் திருடு போய் உள்ளது. இதையடுத்து அந்த மடண்டபத்தின் மேலாளர் போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த நகை திருட்டு சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து  சூரி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் துரித விசாரணை நடித்தி சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment