
ஜீவா நடித்த ’கி’ மற்றும் கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவருக்கு நான்கு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு திரைப்படம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ரத்னசிவா இயக்கிய ’சீறு’ படம் ஆகும்
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ’சீறு’ திரைப்படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதை அடுத்து இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது
ஜீவா ஜோடியாக ரிமா சுமன் நடித்துள்ள இந்த படத்தில் நவ்தீப், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையில், பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Seeru An Action packed commercial entertainer Censored ‘ U /A ‘ !#SEERUCensoredUA #SeeruFrom7thFeb@JiivaOfficial @iamactorvarun @iRiyaSuman @actorsathish @pnavdeep26 @rathinasiva7 @VelsFilmIntl @immancomposer @editorkishore @Ashkum19 @SonyMusicSouth pic.twitter.com/91YbqgAsd0
— Vels Film International (@VelsFilmIntl) January 21, 2020