விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளி பிரபல நடிகை செய்த சாதனை.!!

by adminram |

f3d7944267da998133bf932ee45dab45

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பெரிய ஸ்டார் என்றால் அது அஜித்தும், விஜய்யும்தான். அந்த வகையில் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அதுபோலவே தற்போது விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்திற்கும் அஜித்தின் வலிமை படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அஜித்தின் வலிமை ஷூட்டிங் முடிந்துள்ளது, இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய்யின் பீஸ்ட் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

cd08dd65fb049b4e31812847fa56a56a

இவர்களது படம் வரும்போதெல்லாம் தியேட்டர்களில் திருவிழா கோலம் அடைவதும், படங்களின் வசூல் 100 கோடியை தாண்டி சொல்வதெல்லாம் சாதாரண விஷயம். தமிழைத்தாண்டி இவர்களுக்கு பிறமொழிகளில் ரசிகர்கள் உண்டு.

இதற்காகவே இவர்களது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்து யூடியூபில் வெளியிடப்படுகிறது. அப்படி வெளியிடப்படும் படங்களும் அதிக பார்வைகளை பெறுவது, அதிக லைக்குகளை பெறுவது என பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றன.

cd08dd65fb049b4e31812847fa56a56a
Jothika

அப்படி அஜித், விஜய் படங்கள் செய்த சாதனைகளை தற்போது ஜோதிகாவின் ராட்சசி ஹிந்தி டப் முந்தியுள்ளது. ஹிந்தியில் டப் செய்து வெளியான ராட்சசி படம் 200 மில்லியன் பார்வைகள் மற்றும் 2 மில்லியன் லைக்குகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக விஜய்யின் பைரவா, துப்பாக்கி, விக்ரமின் சாமி ஸ்கொயர், அஜித்தின் விவேகம் ஆகிய படங்கள் உள்ளன.

Next Story