மக்களுக்கே உன் மேல்தான் கோபம்.. இதுல நிலவுக்கா கோபம்? தனுஷை வெளுத்தெடுத்த பிரபலம்

by ராம் சுதன் |
மக்களுக்கே உன் மேல்தான் கோபம்.. இதுல நிலவுக்கா கோபம்? தனுஷை வெளுத்தெடுத்த பிரபலம்
X

வெற்றிகரமாக டிராகன்: சமீபத்தில் தான் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படமும் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் ரிலீஸானது. டிராகன் திரைப்படம்தான் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் தனுஷையும் ஒரு விழா மேடையில் பங்கம் செய்திருக்கிறார். இதோ அவர் கூறியது:

சமீபத்தில் அதுவும் ஒரு வாரத்திற்குள் ஒரு படம் பார்த்தேன். அந்த படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த தம்பி இயக்குனர் நடிகராகவும் இருக்கிறார். அவர் முகத்தில் அழகு என்பதை இல்லை, காலேஜ் மாணவர்கள் அத்தனை பேரும் திரையரங்குகளில் தான் குவிந்து கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. டிராகன் படத்தை பற்றி தான் சொல்கிறேன் .

அது படமா?: இதோடு இன்னொரு படத்தையும் பார்த்தேன். அந்த படத்தில் ஒரு ஹீரோ. அதுவும் வேலை இல்லாத ஒரு ஹீரோ. அவருடைய அப்பா அம்மா அந்த ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். உடனே பெண்பார்க்க போகிறார்கள். பெண்ணை பார்ப்பதற்கு முன்பு வரை திருமணம் வேண்டாம் என்ற முடிவிலேயே அந்த ஹீரோ உட்கார திடீரென ஹீரோயின் இறங்கி வருகிறார்.

ஹோட்டலில் சந்திப்பு: ஹீரோவை பார்த்ததும் ஹீரோயின் டேய் இங்க என்னடா பண்ற என கேட்க அதன் பிறகு தான் ஏற்கனவே இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அந்தப் பெண்ணை பார்த்ததும் ஹீரோவுக்கு கொஞ்சம் ஆசை வந்துவிட்டது .திருமணம் பண்ணிக்கலாம் என நினைக்கிறான். அடுத்த நாள் அந்த பெண்ணை ஹோட்டலில் சந்திக்கலாம் என நினைத்து ஹோட்டலுக்கு வரச் சொல்கிறான் .

கலாச்சாரம் சீர் குழைவு: உடனே ஹோட்டலில் இருவரும் உட்கார்ந்தார்கள். இருவருக்கும் நடுவில் ஒரு பிராந்தி பாட்டில் .அதை அந்தப் பெண் தான் முதலில் திறந்து டம்ளரில் ஊற்றி கொடுக்கிறார் .அந்த ஹீரோ அதை வாங்கிக் கொள்கிறார் .இந்த பெண்ணும் அதை குடிக்கிறார். இந்த ஒரு கலாச்சாரம் அதுவும் நம் தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவில் நடக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன். மூன்று கல்லூரி மாணவிகள் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் .அவர்கள் செய்த அட்டூழியம் என அந்த செய்தியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் .

மனம் நொந்து பேசுகிறேன்: ஒரு தாத்தாவாக மனம் நொந்து போய் இதை சொல்கிறேன் .இந்த குடும்பத்தை காப்பாற்றுகிறது பெண்கள்தான். தாய்மார்கள் தான். ஆம்பளை எக்கேடு கெட்டால் கூட பெண்கள் நல்ல முறையில் இருப்பதினால் தான் குடும்பம் நல்ல முறையில் வாழ்கிறது. ஆக ஒரு திருமணம் செய்யப் போகிற பெண் பிராந்தியை ஊற்றி டேய் குடிடா என சொல்லி இவளும் குடிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கிறார்கள் .

இது எந்த பண்பாட்டை சேரும் .அப்புறம் என் மேல என்ன கோபம், என்ன கோபம்னு டைட்டிலில் வைத்தால் என்ன பிரயோஜனம். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் .அந்தப் படத்தை தான் நான் சொல்கிறேன் .டேய் மக்களுக்கே உன் மேல் தான் கோபம் .பண்ண படம் எல்லாம் அப்பன கிண்டல் பண்றது, அப்பன கேவலப்படுத்துவது. இதை பார்த்து வருகிற இளைஞர்கள் எல்லாரும் எப்படி ஒழுங்கா வருவார்கள் ?அதாவது கொஞ்சம் நகைச்சுவையாக ஏதாவது பண்ணலாம். ஆனால் சமுதாயம் கெட்டுப் போகிற அளவுக்கு தயவு செய்து வேண்டாம் என வேண்டுகோளை விடுக்கிறேன். நான் யாரு மேலையும் குற்றம் சொல்லவில்லை என கே ராஜன் அந்த மேடையில் பேசியிருந்தார்.

Next Story