கார்ப்ரேட்காரர்களிடம் சிக்கிக்கொண்ட காட்டு யானைகள் - காடன் ட்ரைலர் ரிலீஸ்!

by adminram |   ( Updated:2021-09-20 22:24:45  )
kadan
X

dd4b9d2e3b1346137fa2b05f6e6965cf

வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழில் மட்டுமே நடித்து வந்த நடிகர் விஷ்ணு விஷால், தற்போது முதல்முறையாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் காடன் படத்தில் நடித்து வருகிறார்.

பாகுபலி வில்லன் ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஜோயா ஹூசைன் நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரபுசாலமன் இயக்கியுள்ள இந்த படம் கும்கி ஸ்டைலில் யானைப்பகன் குறித்த படமாக உருவாகி வருகிறது.

யானைப்பாகன் மாறன் என்ற கேரக்டரில் நடித்துள்ள விஷ்ணு விஷால் இப்படத்திற்காக உண்மையாகவே யானை பாகன்களுடன் பயிற்சி பெற்று நிஜ யானையுடன் துணிச்சலாக நடித்துள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கினாள் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.

வருகிற மார்ச் 26ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. கார்ப்ரேட்காரர்களின் சதியால் காட்டு யானைகளை அடியோடு அழிக்க திட்டமிடும் அரசியல் வாதிகள் மத்தியில் ராணா யானைகளுக்காக போராடுகிறார். இதோ அந்த ட்ரைலர்..

Next Story