நயன்தாராவிற்கு வாழ்க்கை கொடுத்தது நான் தான்… பரபரப்பை கிளப்பிய சுசி லீக்ஸ் கணவர்…

Published on: June 14, 2021
---Advertisement---

a677b61f2c183ec64dc04a5db15d7a84

என்னது, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா என்று வியக்க வேண்டாம். படங்களில் அமெரிக்கா மாப்பிள்ளையாக நடித்ததுடன், சிறப்பான ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இருப்பவர் கார்த்திக் குமார்.

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கும், கார்த்திக் குமாருக்கும் தான் திருமணம் நடப்பதாக இருக்கும். ஆனால் அது கடைசி நிமிடத்தில் திருமணம் நின்று தனுஷும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்து விடுவார்கள். பல படங்களில் இப்படி ஹீரோயின்களை விட்டுக் கொடுத்தவர் கார்த்திக் குமார்.

ஹீரோயின்களை தானம் கொடுத்தது பற்றி கார்த்திக் குமார் காமெடியாக பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். அந்த வீடியோவில் தான் நயன்தாரா பற்றி பேசியிருக்கிறார்.

அந்த வீடியோவில் கார்த்திக் குமார் கூறியிருப்பதாவது, விவாகரத்து பற்றி பேசினாலே பெரும்பாலான இந்தியர்கள் அமைதியாகிவிடுகிறார்கள். அமெரிக்கா மாப்பிள்ளைக்கே விவாகரத்தாகிவிட்டதா, அச்சோ என்று ரியாக்ட் செய்கிறார்கள். மத்தவங்களோ அமெரிக்கா மாப்பிள்ளைக்கு திருமணமாகிவிட்டதா என்று நினைக்கிறார்கள்.

கோலிவுட் சரித்திரத்தில் எல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கல்யாணமே ஆனதில்லை. கோலிவுட்டில் எத்தனை ஹீரோயினை நானே தானம் பாண்ணியிருக்கிறேன். ஷாலினி, லைலா, ராணி முகர்ஜி. நயன்தாராவுக்கே இப்போ வாழ்வு கிடைச்சிருக்கு என்றால் அதற்கு நான் தான் காரணம். தியாகி சார் நான், தியாகி.

என் கல்யாணத்திலேயே கடைசி நிமிடம் வரை கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது. அச்சச்சோ நடக்குமா, நடக்காதுனு இருந்தது. கடைசி நிமிடத்தில் யாராவது வந்து நிறுத்துங்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயம். அப்படி யாராவது சொன்னால், நான் பழக்க தோஷத்தில் எழுந்து சென்றுவிட்டால் என்ன செய்வது என்று பயம் என தெரிவித்தார்.

Leave a Comment