
ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கி 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. இது ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். மலேசியாவில் நடக்கும் கதை என்பதால் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. இப்படத்தில் அடித்தட்டு மக்களுக்காக போராடும் போராளியாகவும், டானாகவும் ரஜினி நடித்திருந்தார்.
இப்படத்தில் ரஜினி பேசிய ‘கபாலிடா’ வசனம் உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களை கவர்ந்தது. பலரும் அதை டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டனர். கபாலி திரைப்படம் வெளியான போது விமானத்தில் கபாலி போஸ்டரை டிசைன் செய்து விளம்பரம் செய்தார் தாணு. எனவே, வசூலில் இப்படம் சாதனை செய்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு ரஜினியை வைத்து சில போட்டோஷூட்கள் நடத்தப்பட்டது. அதில், சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. புளு ஜீன்ஸ் வெள்ளை சட்டை அணிந்து சட்டையை கழட்டி ரஜினி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






