
துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால், கடந்த வருடம் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை கூட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இளசுகளை ஏங்க வைத்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கால் பதித்த காஜல் அகர்வால் அங்கும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

அழகால் ரசிகர்களை கட்டிப்போட்ட காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





