பிரபல பெண் நடன இயக்குனர் இயக்கும் முதல் படத்தில் காஜல் அகர்வால்: நாயகன் யார் தெரியுமா?

e3a206c7bf8dc0b26cc00257772946b4-1

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தார். இவர் பிரபல நடன இயக்குனர் கலா அவர்களின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நடன இயக்குனராக இவர் பணிபுரிந்துள்ளார்

இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். பிருந்தா இயக்கவுள்ள முதல் படம் ரொமான்ஸ் படம் என்றும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய நடிகர் நடிகைகள் இணைய இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழில் இதுவரை சொல்லப்படாத புதுவிதமான காதல் கதை ஒன்றை இந்த படத்தில் தான் சொல்ல இருப்பதாக இயக்குனராக இருக்கும் பிருந்தா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles
Next Story
Share it