நடிக்க சம்மதிக்காத சிவாஜி... கலைஞர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை 'ஓகே' வாங்கி விட்டதே..!
லைஞர் கருணாநிதி கதை வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து நடித்த படம் குறவஞ்சி. ஆனால் அந்தப் படத்திலே முதலில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது சிவாஜி இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தப் படத்திலே முதலில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. படத்துக்கான தொடக்க விழாவெல்லாம் நடைபெற்ற நிலையிலே அவருக்கும் கலைஞருக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனால அவரை அந்தப் படத்தில் இருந்து நீக்கி விட்டு சிவாஜியை அந்தப் படத்திலே நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். சிவாஜியிடம் நீங்க இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கணும்னு கலைஞர் கேட்டார்.
அதற்கு சிவாஜி உங்கள் கட்சிக்காரரும் நண்பருமான எஸ்எஸ்.ராஜேந்திரன் தானே இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்போ நான் அவரு நடிக்க வேண்டிய பாத்திரத்துல நடிச்சா என்னை தவறா நினைக்க மாட்டாரான்னு கேட்டார் சிவாஜி.
முதலில் அந்தப் படத்தில் நடிப்பதற்கு சிவாஜிக்கு உடன்பாடு இல்லாமல் தான் இருந்தது. அப்படிப்பட்ட அவர் அந்தப் படத்திலே நடித்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் கலைஞர் சொன்ன ஒரு வார்த்தை. என்னோட நண்பர் அப்படிங்கற முறையிலே இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் கலைஞர்.
அந்த வார்த்தையைக் கேட்ட பின்னாலே எப்படி என்னால் அந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியும். அதனால் தான் ஒப்புக்கொண்டேன் என்று ஒரு பத்திரிகை பேட்டியிலே பதிவு செய்து இருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. மேற்கண்ட தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.