ராயன் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. படம் பார்த்துவிட்டு கலாநிதிமாறன் செய்த வேலை!...

by ராம் சுதன் |

தனுஷின் 50வது படமாக உருவாகி இருக்கிறது ராயன். இந்த படத்தின் கதையை எழுதி தனுஷே இயக்கி இருக்கிறார். பவர் பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் இது. தனுஷ் மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இயக்கம் என்பது அவருக்குள் இருக்கும் பேஷனாக இருக்கிறது.

அது அண்ணன் செல்வராகவனிடமிருந்து கற்றுக்கொண்டது. அது போல வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களிலும், மசாலா படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் நடித்ததால் இயக்கும் கலை தனுஷுக்கு வந்துவிட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ராயன் படத்தில் துஷரா விஜயன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருக்கிறார்கள். கேப்டன் மில்லர் படத்தை முடித்தவுடனே அப்படத்திற்காக வளர்த்த தலைமுடி மற்றும் தாடியை திருப்பதிக்கு போய் மழித்துவிட்டு உடனே தனுஷ் துவங்கிய படம்தான் ராயன்.

வேகமாக படத்தை துவங்கி ஏக் தம்மில் படத்தை முடித்துவிட்டார் தனுஷ். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் தனுஷ் தனது சொந்த ஆசைகள் பற்றி நிறையவே பேசியிருந்தார். இப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது

இந்நிலையில், சென்சாரில் இப்படத்திற்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் படத்தில் இடம் பெற்றிருக்கும் வன்முறை காட்சிகள்தான். தியேட்டரில் பிரச்சனை இல்லை. எப்படியும் ரசிகர்கள் வந்து படம் பார்த்துவிடுவார்கள். ஆனால், ‘ஏ’ சான்றிதழ் எனில் ஓடிடியில் குறைவான விலைக்கே வாங்குவார்கள்.

எனவே, சில காட்சிகளை வெட்டிவிடலாமா என படக்குழு யோசித்தபோது, இப்படத்தை பார்த்த கலாநிதிமாறன் ‘படம் நன்றாக இருக்கிறது. படத்தில் எந்த காட்சியையும் வெட்ட வேண்டாம். ஏ சர்ட்டிபிகேட் இருந்தாலும் பரவாயில்லை’ அப்படியே ரிலீஸ் செய்யுங்கள். ஓடிடிக்கு போகும்போது சில காட்சிகளை மாற்றி வேற சென்சார் வாங்கி கொள்ளலாம்’ என சொல்லிவிட்டாராம்.

Next Story