900 கோடி வசூல் பண்ணாலும் கல்கி நிலைமை இதுதான்!. இவங்கள நம்ப முடியாது!..

by ராம் சுதன் |

பாகுபலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் பிரபாஸ். ஏனெனில், பாகுபலி மற்றும் பாகுபலி 2 என இரண்டு படங்களிலும் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மெகா வெற்றி பிரபாஸை ஒரு பேன் இண்டியா நடிகராக மாற்றியது.

அதாவது அவரின் படங்கள் தெலுங்கில் உருவானாலும் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புரூஷ், சலார் என அனைத்து படங்களுமே அப்படித்தான் வெளியானது. அந்த வகையில் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் கல்கி 2898 ஏ.டி.

நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்த படத்தில் கமல்ஹாசனும், அமிதாப்பச்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். மேலும், தீபிகா படுகோனே, திஷா பத்தானியும் நடித்திருந்தார்கள். ஆங்கில பட பாணியில் VFX காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும், மகாபாரதத்தையும் இதில் கலந்து கட்டி அடிந்திருந்தார்கள்.

படம் மெதுவாக போகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. ஆனால், வி.எப்.எக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது என படம் பார்த்தவர்கள் சொன்னார்கள். ஆனாலும், உலகமெங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை இப்படம் உலகமெங்கும் 900 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

அதேநேரம், கல்கி திரைப்படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், பெரிய லாபமில்லை என்றாலும் நஷ்டமில்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். இப்படத்தின் தமிழக உரிமையை வாங்கிய வினியோகஸ்தர்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படத்தின் தயாரிப்பாளர்.

எனவே, கல்கி படத்திற்கு பெரிய லாபம் இல்லை என சொல்லி சிவகார்த்திகேயன் படத்தை தங்களுக்கே கொடுக்க வேண்டும் என கேட்க முடிவு செய்திருக்கிறார்களாம். கல்கி படத்தின் முதல் பாகம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அதிக காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story