கமல் படத்துடன் மோதும் ரஜினி... இது மட்டும் உறுதின்னா... யார் ஜெயிப்பாங்க?

உலகநாயகன் கமல் படமும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படமும் கடைசியாக மோதியது எப்போதுன்னு தெரியுமா? 2005ல் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படமும், கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. அப்போது மும்பை எக்ஸ்பிரஸ் படம் படுதோல்வி அடைந்தது.

சந்திரமுகி படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. வருடக்கணக்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு அவர்கள் நடித்த படங்கள் ஒன்றாக ரிலீஸாகவில்லை. இருந்தாலும் தற்போது அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே வேளை இந்த போட்டியில் கமல் களத்தில் நேரடியாக இறங்கவில்லை. அவரது சொந்த நிறுவனத்தின் தயாரிப்புப் படம் தான் வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தான் அந்தப் படம்.

கமர்ஷியல் ஆக்ஷன் படமாகத் தயாராகி வருகிறது. வேட்டையன் படமும் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அஜீத், விஜய்க்குப் பிறகு 3வது இடத்தில் சிவகார்த்திகேயன் வருவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அதனால் அவரது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம். அதே போல் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் பெரும் சர்ச்சையையும் வரவேற்பையும் பெற்றது. அது மட்டுமல்லாமல் ரஜினிக்குக் கடைசியாக வெளியான ஜெயிலர் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இருபடமும் இதே போல மோதிக்கொண்டால் அது கொஞ்சம் டஃபாகத் தான் இருக்கும்.

வேட்டையன் படம் அக்டோபர் 10ல் ரிலீஸ் ஆவதாக முதல்ல சொல்லி இருந்தாங்க. அப்புறம் கங்குவா ரிலீஸ் ஆகிறதுன்னு சொன்னாங்க. இதுவும் லைகா நிறுவனத்தோட தயாரிப்பு தான். இது அதிகளவில் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. சூர்யாவோட படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு. அதனால சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தோட மோதலாம்னு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை விடப்போறாங்களாம்.

அக்டோபர் 31ம் தேதி அமரன் ரிலீஸ். இது கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு. சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அதனால் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. அக்டோபர் 30 ம் தேதி வேட்டையன் ரிலீஸ் பண்ணிடலாம்னு பிளான் பண்ணியிருக்காங்களாம். ஆனால் இதுல எதுவுமே உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதால் சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles
Next Story
Share it