யாருமே செய்யாத சாதனையைத் தட்டித் தூக்கிய உலகநாயகன்... அப்படி என்னப்பா செஞ்சிட்டாரு?

by ராம் சுதன் |

தமிழ்ப்பட உலகில் சிவாஜிக்கு அடுத்தபடியாக அவரின் கலையுலக வாரிசு என்று சொல்லும் வகையில் நடித்து வருபவர் கமல். சிவாஜி எப்படி ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினாரோ, அதே போல கமலும் இதுவரை என்னென்ன கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க முடியுமோ அத்தனை கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கமல் தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் அந்தக் கேரக்டருக்காக மெனக்கிட்டு அதை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக நடித்து அசத்துவதில் கில்லாடி. உதாரணத்திற்கு அவர் தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மேக்கப் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அந்தக் கேரக்டரை மெருகூட்டுவதில் அவர் கில்லாடி.

அவரது இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம், இந்தியன் 2, கல்கி என இந்தப் படங்களைப் பட்டியல் போட்டால் இன்னும் அதிகமாகவே செய்யும். கேரக்டர்களுக்கு மேக்கப் போட்டால் மட்டும் போதாது. அவர்களைப் போலவே வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக சில கேரக்டர்களுக்காகப் பிரத்யேக பயிற்சியும் எடுப்பார்.

உதாரணத்திற்கு தெனாலி படத்தில் இலங்கைத் தமிழ் பேச வேண்டும் என்பதற்காக 6 மாதகாலமாக பி.எச்.அப்துல்ஹமீத்திடம் பயிற்சி பெற்றுள்ளார். அதே போல ராணுவ வீரராக சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஆளவந்தான் படத்திற்காக ராணுவ வீரர்களின் பணிகளை நேரில் பார்த்துக் கற்றுக்கொண்டாராம்.

விஸ்வரூபம், ஹேராம் படங்களுக்காகவும் பிரத்யேகமாக பல பயிற்சிகளை எடுத்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாக யாருமே செய்யாத அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுவார். அந்த வகையில் இன்று வரை அவர் ஹீரோவாக நடிப்பது தமிழ் சினிமா உலகிற்கே பெருமை தான்.

உலகநாயகன் கமல் முதன் முதலாக ஹீரோவாக நடித்த கன்னியாகுமரி படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்படி 50 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கும் வேறு ஏதாவது நடிகர்கள் இருக்கிறார்களா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான். 50 ஆண்டுகளாக தொடர்து ஹீரோவாக நடித்து வரும் பெருமை கமல்ஹாசனுக்கு மட்டுமே உள்ளது.

உலகநாயகன் கமல் தான் நடிக்கும் படங்களில் எந்த வகையிலாவது ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்று துடிப்புடன் இன்று வரை செயல்படுபவர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவுக்கே முதலீடு செய்பவர் இவர் தான்.

கன்னியாகுமரி படத்தில் தான் கமல் முதல் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ரீட்டா பாதுரி நடித்துள்ளார். இந்தப் படத்தை 1974ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியுள்ளார். இது ஒரு மலையாளத்திரைப்படம்.

Next Story