கமல் பண்ணுன அந்த வேலை... நாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போன சிவாஜி...!

by ராம் சுதன் |
கமல் பண்ணுன அந்த வேலை... நாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போன சிவாஜி...!
X

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தக் லைஃபில் அவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதனால் தான் அமோக வரவேற்பு வந்துள்ளது. அது தவிர இநதப் படத்தில் முக்கிய வேடத்தில் சிம்புவும் நடிக்கிறார். இதுவரை எடுத்த காட்சிகள் எல்லாம் மணிரத்னமே வியக்கும் அளவுக்கு வந்துள்ளதாம். எந்த இடத்திலும் கமல் நடிக்கும்போது ரீடேக்கே வாங்கவில்லையாம்.

அந்த வகையில் நாயகன் படம் உருவானபோது நடந்த சில ஆச்சரியமான தகவல்களை இப்போது பார்க்கலாம். இதுகுறித்து நாயகன் பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி இதுகுறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்தப் படத்தில் கமல் ஒவ்வொரு காட்சியையும் தனது நடிப்பால் மெருகேற்றி இருப்பார்.

கமல் நடித்த நாயகன் படத்துக்குக் கதையை முதலில் சிவாஜி சாரை வைத்து தான் எடுப்பதாக இருந்தோம். அதுக்காக அவருக்கு அட்வான்ஸ் 30 ஆயிரம் வரை கொடுத்தோம். இந்த விஷயத்தைக் கமலிடமும் சொன்னேன். கமலுக்கு அதுல நிழல்கள் ரவி கேரக்டர். அதைத் தான் கொஞ்சம் பிரம்மாண்டமா பண்ணனும் நினைச்சிருந்தோம்.

ஆனா கமல் அதுல நடிக்க விரும்பல. அதனால சிவாஜிக்கு அந்தக் கேரக்டரைப் பண்ண முடியலயேங்கற வருத்தம் நிச்சயமா இருக்கும். அதுபற்றி அவரு ஏன் பண்ணலன்னும் பெரிசா கேட்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாயகன் படம் 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார். கமல் உடன் இணைந்து சரண்யா, ஜனகராஜ், டெல்லிகணேஷ், நாசர், கிட்டி, குயிலி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.சி.ஸ்ரீராம். இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் தேனாறாகப் பாய்ந்தது. நான் சிரித்தால், நீ ஒரு காதல், அந்தி மழை மேகம், நிலா அது வானத்து மேலே, தென் பாண்டி சீமையிலே ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story