இந்த ஆண்டு இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படமாக இந்தியன் 2 திரைப்படம் மாறி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் 250 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியானது.
28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான இந்தியன் திரைப்படம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் வசூல் ஈட்டி தந்த படமாகவும் மாறியது. ஆனால், இந்தியன் 2 திரைப்படம் முதல் ஞாயிற்றுக்கிழமையை வசூல் செய்ய முடியாமல் முடங்கிவிட்டது.
இந்திய அளவில் இந்தியன் 2 திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை ஆனா நேற்று வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தியன் 2 தமிழ்நாட்டிலேயே 17 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை நிலவரம் படுமோசமாக செல்ல காரணமே படத்துக்கு எதிராக குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான்.
20 நிமிட காட்சிகளை தாமதமாக ட்ரிம் செய்வதாக சொல்லப்பட்டாலும், அது படத்திற்கு எந்த வகையிலும் பலனளிக்காது என்றே கூறிய நிலையில், அதுதான் நடந்திருக்காது. லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டத்தை இந்தியன் 2 திரைப்படம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதுவரை இந்தியளவில் இந்தியன் 2 திரைப்படம் வெறும் 60 கோடி ரூபாய் வசூல் தான் பெற்றிருப்பதாகவும், உலகளவில் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் எனக் கூறுகின்றனர். 3 நாள் ஆகியும் 100 கோடி வசூலை இந்தியன் 2 எடுக்கவில்லை. கடைசி வரை 100 கோடி எடுக்குமா என்றாலும், அதுவும் கேள்விக்குறி தான்.
250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்தால் தான் லாபகரமான படமாகவே அமையும் என்கிற நிலையில், 100 கோடி கூட வசூல் செய்யாமல் மிகப்பெரிய நஷ்டத்தை இந்த படம் சந்திக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…