டிசம்பர் 23-ஆம் தேதி குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமூக அமைப்புகள், நடிகர் சங்கம், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பலர் அமைப்புகளுக்கு திமுக அழைப்பு விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை சந்தித்த திமுக நிர்வாகிகள் இந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை கமலஹாசன் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக வரும் 23ம் தேதி நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகளின் பேரணியில் மக்கள் நீதிமய்யம் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், மு க ஸ்டாலின் அவர்களிடம் நேரில் விளக்கி விட்டதாகவும் இதுகுறித்து இருதரப்பினரும் விரைவில் அறிக்கை வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது
திமுக பேரணியில் மக்கள் நீதிமய்யம் கலந்து கொண்டால் அது வரும் 2021ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணிக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் இந்த திடீர் முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…