More

மாஸ்டர் படத்தில் கமல்ஹாசன்.. லோகேஷிற்கு மட்டும் ஸ்பெஷல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பல சிக்கல்களுக்கு மத்தியில் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. 

Advertising
Advertising

விஜய் படம் என்பதால் எப்போதும் போல கூட்டம் அலைமோதியது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த போதிலும், படம் ப்ளாப் என்ற தகவலும் றெக்கை கட்டி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் கமல்ஹாசனின் மாணவனாக நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கே.எஸ். சேதுராமன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய படம் நம்மவர். அப்படத்தில் கமல் காலேஜ் ப்ரோபசர் விசி செல்வமாக நடித்திருப்பார். அவரின் மாணவனாக தான் விஜய் என மாஸ்டர் படத்தில் காட்சி அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

Published by
adminram