கமல் என்னை பஞ்சதந்திரத்தில் நடிக்க அழைத்தார் – மனம் திறந்த பிரபல கிரிக்கெட் வீரர் !

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கமல் தன்னை பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க கூப்பிட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரராகவும் கேப்டனாகவும்  இருந்த ஸ்ரீகாந்த் அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் தமிழ் வர்ணனை செய்து வருகிறார். பிறகு தமிழ் வர்ணனைகளைப் கே என்ற தனியான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இப்போது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப் படுவதை அடுத்து ஒரு ரசிகர்உங்கள் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தால் அதில் யாரை நடிக்க வைப்பீர்கள் ?’ என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்து அதுபோன்ற யோசனை எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு முன்பு ஒருமுறை பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க தன்னை நடிகர் கமலஹாசனும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் அழைத்ததாகவும், ஆனால் அப்போது தங்களது முடியாமல் போனதாகவும் தனது பழைய கால நினைவுகளை மனம் திறந்து கூறியுள்ளார்.

Published by
adminram