கமல் என்னுடைய அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்தார் – 34 வருடங்களுக்குப் பின் வந்த சர்ச்சை !

Published on: February 26, 2020
---Advertisement---

35c4dd4654e0a6119ec6372ea1b23c6c

புன்னகை மனன்ன் படத்தில் இடம்பெற்ற கமல் ரேகாவுக்கு இடையிலான முத்தக் காட்சி தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்படட்து என நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

புன்னகை மன்னன் படத்தின் ஆரம்பக் காட்சியில் இடம்பெறும் என்ன சத்தம் இந்த நேரம் பாடலின் இடையில் கமல் மற்றும் ரேகா இடம்பெறும் லிப் லாக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த காட்சி பற்றி சமீபத்தில் பேசிய நடிகை ரேகா அந்த காட்சியின் போது எனக்கு முத்தம் கொடுக்கப் போவது தெரியாது. கமலும் இயக்குனர் பாலச்சந்தரும் அதை என்னிடம் சொல்லவில்லை எனக் கூறினார். இது ஏற்கனவே அவர் பலமுறை சொன்னது என்றாலும் இப்போது சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

இதுபற்றி பேசிய ரேகா, ‘அந்த காட்சிக்கு முன்னதாக கமலிடம், பாலச்சந்தர் நான் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். வர் ஒன்டூத்ரீ சொன்னதும் கமல் முத்தம் கொடுத்துவிட்டார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்நான் பாலச்சந்தரின் உதவியாளர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். அவர்கள் இந்த முத்தத்தால் அந்த காட்சி சிறப்பாக அமையும். அப்படி இல்லை என்றால் சென்ஸாரில் இருந்து தூக்கிவிடுவார்கள் என்றார்கள். நான் அவர்களிடம் ’சென்சார் என்றால் என்ன’ எனக் கேட்டேன். ஏனென்றால் அப்போது எனக்கு 16 வயதுதான்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் கமல், பாலசந்தர், அவரின் உதவியாளர்களான வசந்த், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Leave a Comment