ரஜினி 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய பிறகு அந்த படத்தை அடுத்து யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே ரஜினி நடிக்க அந்த படத்தை கமல் தயாரிப்பார் என்றும் சுந்தர் சி அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. அது ஒட்டுமொத்த ரஜினி கமல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.
90களில் பார்த்த ரஜினியை மீண்டும் நாம் பார்க்க போகிறோம். ஒரு ஃபீல் குட் திரைப்படமாக அது இருக்கப் போகிறது என்றும் அனைவரும் அந்த படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் சி ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த படத்திலிருந்து நான் விலகுகிறேன் என அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.
அதற்கு காரணம் சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதை இன்று கமல் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்ததும் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசி இருந்தார். அதனால் ரஜினி 173 படத்தை நிச்சயமாக சுந்தர் சி இயக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்து விட்டது. அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தை அடுத்து யார் இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி இருந்து வருகிறது.
புது முகங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கும் அதற்கு கமல் நிச்சயமாக இருக்கிறது. கதை நன்றாக இருந்தால் மட்டுமே என்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் சினேகன் ஒரு பேட்டியில் பேசிய சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ரஜினி கமல் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் .அந்தப் படத்தை இன்றைய இளம் இயக்குனர்கள் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து ரஜினியையும் கமலையும் மோல்ட் செய்த இயக்குனர்கள் அந்த படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன் என அந்த பேட்டியில் சினேகன் கூறியிருந்தார்.

குறிப்பாக கே எஸ் ரவிக்குமார் பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார் சிநேகன். அதுமட்டுமல்ல கமலை வைத்து தெனாலி படத்தை எடுத்த சமயத்தில் அந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ் பி முத்துராமன் ரஜினியையும் கமலையும் இணைத்து நான் படத்தை எடுத்து விட்டேன். அதன் பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும்.அப்படி நடித்தால் அந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமார் எடுக்க வேண்டும் என கூறியிருந்தாராம்.