கமல், ரஜினி இயக்குனரின் மகன் இயக்கும் படத்தில் இளம் நடிகர்!

Published on: January 23, 2020
---Advertisement---

01f280b816e9672ce504ef76411d7d38

பழம்பெரும் இயக்குனர் ஐவி சசி அவர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ மற்றும் கமலஹாசன் நடித்த ’குரு’ ரஜினிகாந்த் நடித்த ’காளி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐவி சசியின் மகன் அனிசசி என்பவர் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவர் முதன்முதலாக இயக்கும் திரைப்படம் தெலுங்கில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படம் ஒரு ரொமான்ஸ் காமெடி கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் லண்டனில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 

இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக்செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். இவருக்கு இந்த படம்தான் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஒரு செஃப் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை 100 கிலோ வரை அதிகரிக்க அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 

மேலும் இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன் மற்றும் ரிதுவர்மா நடிக்க உள்ளனர். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் வரும் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment