ரஜினிகாந்த் பெருமை மிகுந்த தமிழன் – அரசியல் கூட்டணி குறித்து கமல் கருத்து !

 சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கமல், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசியுள்ளார்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு இருவருமே சாத்தியங்கள் இருப்பதாக சொல்லியுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னையில் தி அல்ஜிப்ராகிளப் நடத்திய இந்து நிறுவனட் என்.ராமுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது ரஜினியுடனான நட்பு மற்றும் அவரோடு அரசியலில் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்விக்கு ‘ரஜினிகாந்த் பெருமை மிகுந்த தமிழன். அவர் தமிழகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் அவருடன் இணைந்து பணியாற்ற அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ’ எனக் கூறினார்.

இன்னும் கட்சி ஆரம்பிக்காத நிலையில் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்வதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

Published by
adminram