‘சார்பட்டா பரம்பரை’ டீமை நேரில் அழைத்து பாராட்டிய கமல் - வைரல் புகைப்படங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என கதாபாத்திர படைப்புகளை ரஞ்சித் சிறப்பாக அமைத்துள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இப்படத்திற்கு Film companion எனும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் FC GOLD என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்படத்தை ரசிகர்கள், விமசர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் இப்படத்தை மிகவும் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இயக்குனர் ரஞ்சித், இப்படத்தின் கதாசிரியர் தமிழ் பிரபா, பசுபுதி, கலையரசன், ஜான் விஜய் மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அவரை சந்திக்க சென்றனர்.. படக்குழுவினரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ் பிரபா ‘'சார்பட்டா' தனக்கு மிகவும் பிடித்துப் போக எங்கள் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன், இதில் நடித்தவர்கள்,அந்த கதாபாத்திரங்களாகவே மக்கள் மனதில் இன்னும் நீண்டகாலம் அறியப்படுவார்கள்.அவர்களின் உண்மையான பெயர்கள் பரவலாக வெளியே தெரிய குறைந்தது 2 ஆண்டுகளேனும் ஆகும் என்றார்’ என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.